உலக உணவு திட்டம் மூலமாக வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொதிகளானது இன்று (2023.02.09) அன்று கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் வழங்கப்பட்டது. இதில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர் சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு குறித்த உலர் உணவுப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

பொது நிருவாக அமைச்சின் அறிவுரையின் பேரில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறந்த கிராமிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்உணவுப்பாதுகாப்பு குழு தெரிவில் முதலாம் இடத்தை தம்பலகாமம் பாலம்பட்டாறு கிராம உத்தியோகத்தர் குழு வெற்றி பெற்றது.இதற்கான கேடயமும் சான்றிதழும் திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04)காலை இடம் பெற்ற 75 ஆவது சுதந்திர தின வைபவத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கான பரிசில்களை தம்பலகாமம் பிரதேச செயலக பாலம்போட்டாறு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.தங்கரூபன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

ජාතික ඵලදායිතා ලේකම් කාර්යාලය මගින් රාජ්ය දෙපාර්තමේන්තු අතර 2020 ජාතික ඵලදායිතා තරගයේ සම්මාන ප්රදානෝත්සවය අද 2022.12.15 කොළඹදී පැවැත්විණි. මෙහිදී තඹලගමුවප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයට ජාතික මට්ටමේ 3 ස්ථානය හිමිවිය.
කොළඹ අරලියගහ මන්දිරයේ පැවති මෙම සම්මාන ප්රදානෝත්සවයේ ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස අග්රාමාත්ය ගරු ඩයිනස් ගුණවර්ධන මහතා සහභාගී විය.
தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் இன்றைய தினம் 15.12.2022 நடைபெற்றது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.
கொழும்பு அலரி மாளிகையில் இடம் பெற்ற விருது வழங்கல் வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதம மந்திரி கௌரவ தினேஸ் குணவர்தன கலந்து கொண்டார்.இதன் போது தொழில் உறவுகள் அமைச்சர் மனுச நாணயக்காரமிடருந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி இதற்கான விருதினை பெற்றுக் கொண்டார்.

நாட்டின் 75 ஆவது தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (04.02.2023) அன்று இடம் பெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதன் போது அலுவலக வளாகத்தில் சக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மரநடுகையும் இடம் பெற்றது.
இதில் பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாச்சார அதிகார சபை இணைந்து ஏற்பாடு செய்த சாகித்திய விழா இன்று (2022.11.26) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட செயலாளர் B.H.N.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்தார்.
குறித்த விழாவில் கலை கலாசார போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் "ஏர்முனை 3" எனும் நூல் பிரதியும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் சம்பிக்க பண்டார, பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

























