தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாச்சார அதிகார சபை இணைந்து ஏற்பாடு செய்த சாகித்திய விழா இன்று (2022.11.26) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட செயலாளர் B.H.N.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்தார்.
குறித்த விழாவில் கலை கலாசார போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் "ஏர்முனை 3" எனும் நூல் பிரதியும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் சம்பிக்க பண்டார, பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

























