சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் விருதில் இரண்டாம் மற்றும் மாகாண விருது முள்ளிப்பொத்தானை எம்.ஆர்.எம்.பிஸ்ரியாவுக்கு
பெண் தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான சிறந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஹில்டனில் இடம் பெற்றது.
இதனை மகளிர் தொழில் முயற்சியாண்மை மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் நடுத்தரளவு தொழில் உற்பத்தியில் ஈடுபட்டமைக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமாக வெள்ளிப்பதக்கத்தையும்,மாகாண மட்ட விருதையும் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த முள்ளிப்பொத்தானை எம்.ஆர்.எம்.பிஸ்ரியா பெற்றுக் கொண்டார்.
ஐந்தாண்டு கால வருட சராசரி வருமானம் அடிப்படையில் சிறந்து விளங்கும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக திறம்பட வருமானமீட்டி தமது தொழில் விருத்திகளை பெற்றமைக்காக குறித்த விருதுகள் வழங்கலில் தெரிவுகள் இடம் பெற்றது.
குறித்த பிஸ்ரியா எனும் பெண் பை (Bag) உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றமைக்காக ரூபா 100000.00 பெறுமதியான காசோலையும் கேடயமும்,மாகாண மட்ட விருதுக்கு ரூபா 75000.00 காசோலையும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை பைகள்,பெண்களுக்கான பை உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறார் இதற்காகவே இவ் விருது கிடைக்கப்பெற்றது.
இதனை கௌரவிக்கும் முகமாகவும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி பிரதேச செயலகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.இக் குறித்த பாராட்டு விழா நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர்,கணக்காளர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இக் குறித்த பெண் சுயதொழில் முயற்சி ஊக்கிவிப்பு தொடர்பில் சிறந்த பயிற்சி வழங்குனராகவும்,போதனாசியராகவும் பணியாற்றி வருகின்றார்.
இதற்கு முன்பும் பல பெண் சுயதொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதுகளை தனதாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
616584683_2412639085839555_556284907408709447_n.jpg617629439_2412638662506264_5730257438419266630_n.jpg
616832877_2412639239172873_4077447471996793870_n.jpg
தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16.01.2026) பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பிரதியமைச்சருமான கௌரவ அருண் கேமசந்திர தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் கௌரவ H. தாலிப் அலி, உப தவிசாளர் கௌரவ V. விஜயகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.616556483_2411044165999047_7749627702044769340_n.jpg617120697_2411044035999060_7291712616329191051_n.jpg616670214_2411044292665701_3962066419885760181_n.jpg616950080_2411044072665723_857533664426591477_n.jpg

திருகோணமலை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) உத்தியோக பூர்வமாக கடமையினை இன்று (05.01.2026)பொறுப்பேற்றுக் கொண்ட எமது பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

 

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ නව අතිරේක දිස්ත්‍රික් ලේකම් (ඉඩම්) ලෙස ජේ. ශ්‍රීපති මහත්මිය අද (05) දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී නිල වශයෙන් වැඩ භාර ගත්තාය.
මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්. ජී. එම්. හේමන්ත කුමාර මහතා පැමිණ නව අතිරේක දිස්ත්‍රික් ලේකම්ට සුබ පැතූ අතර ඔහුව පිළිගත්තේය.
දිස්ත්‍රික් අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුධාකරන් මහතා, ඉහළ නිලධාරීන් සහ නිලධාරීන් උත්සවයට සහභාගී වී සුබ පැතුම් පළ කළහ.
2014 සිට 2025 දක්වා තඹලගමම් ප්‍රාදේශීය ලේකම්වරිය ලෙස සේවය කළ ජේ. ශ්‍රීපති මහත්මිය ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ I ශ්‍රේණියේ සාමාජිකාවක්. මීට පෙර ඇය කුච්චවවේලි හි සහකාර ප්‍රාදේශීය ලේකම්වරිය ලෙසද සේවය කර ඇත.
පරිපාලන සේවයේ පුළුල් අත්දැකීම් ඇති ජේ. ශ්‍රීපති මහත්මිය ඉදිරි කාලවලදී දිස්ත්‍රික්කයේ ඉඩම් පරිපාලනය සහ ඒ ආශ්‍රිත සංවර්ධන කටයුතු සඳහා නායකත්වය දෙනු ඇති බව සැලකිය යුතු කරුණකි.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ. ஸ்ரீபதி அவர்கள் இன்று (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் கலந்துகொண்டு, புதிய மேலதிக அரசாங்க அதிபருக்கு (காணி) வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் அவரை வரவேற்றார்.
இவ்வரவேற்பு நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்கள் இலங்கை நிருவாக சேவையின் தரம் ஒன்றை சேர்ந்தவராவார். இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி ஜெ. ஸ்ரீபதி அவர்கள், மாவட்டத்தின் காணி நிர்வாகம் மற்றும் அது சார்ந்த அபிவிருத்திப் பணிகளை இனிவரும் காலங்களில் முன்னெடுத்துச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
612007578_898998685971577_7557618010973989847_n.jpg

611252231_2401789483591182_4030869831773269891_n (1).jpg608186977_2401789610257836_1742139170551066901_n.jpg611809349_2401785670258230_7347847437435233077_n.jpg

"ප්‍රජාශක්ති" දරිද්‍රතාවය තුරන් කිරීමේ ජාතික මෙහෙයුම - සමාජ සංවර්ධන කමිටු සාමාජිකයින් සඳහා වන දැනුවත් කිරීමේ වැඩමුළුව
 
பிரஜாசக்தி" வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கம் சமூக அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு*
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட "பிரஜா சக்தி "சமூக அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (07. 01.2026) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் ( காணி) ,தம்பலகாமம் பதில் பிரதேச செயலாளருமான திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான இந்தப் பயிற்சிப் பட்டறை, சமூக வளர்ச்சி, பொருளாதார சுயநிலை, அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நடைமுறை செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
அரசின் புதிய கொள்கைத் திட்டங்கள் ஊடாக கிராமிய அபிவிருத்தி தொடர்பில் கூட்டினைந்த முடிவுகளுடன் அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பிலும் விழிப்பூட்டப்பட்டது. இதன் மூலம் கிராமங்களை வலுப்படுத்தவும் ஒரு உத்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வின் வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எஸ்.எம். றியாத் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.லங்கா பட்ம ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
611793312_2403515796751884_3158433820376134861_n.jpg612044976_2403515826751881_8384350413577643077_n.jpg612083704_2403515866751877_4560719457902553296_n.jpg612509462_2403515753418555_4206571321810043946_n.jpg
තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ප්‍රජා ශක්ති නායකයින් සඳහා පත්වීම් ලබාදීමේ උත්සවය 31.12.2025 දින ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්වුණි.තඹලගමුව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ප්‍රජා ශක්ති නායකයින් සඳහා පත්වීම් ලබාදීමේ උත්සවය 31.12.2025 දින ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්වුණි.
මෙම උත්සවය තඹලගමුව  ප්‍රාදේශීය ලේකම්  ජේ. ශ්‍රීපති මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වුණු අතර, නියෝජ්‍ය අමාත්‍ය අරුණ් හේමචන්ද්‍ර මහතා සහභාගී වී පත්වීම් ලබාදීම සිදු කළේය.
මෙම අවස්ථාවට සහකාර ප්‍රාදේශීය ලේකම්, ආර්ථික සංවර්ධන නිලධාරීන්, ග්‍රාම නිලධාරියවරුන්, සමෘද්ධි සංවර්ධන නිලධාරීන් ඇතුළු බොහෝ දෙනා සහභාගී වූහ.
 
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு 31.12.2025 பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இதில் உதவி பிரதேச செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
 
WhatsApp Image 2026-01-01 at 11.32.57 AM.jpegWhatsApp Image 2026-01-01 at 11.32.57 AM (1).jpegWhatsApp Image 2025-12-31 at 1.41.59 PM.jpegWhatsApp Image 2025-12-31 at 1.42.03 PM.jpegWhatsApp Image 2025-12-31 at 1.22.54 PM.jpegWhatsApp Image 2026-01-01 at 11.32.56 AM.jpeg

අනු-ප්‍රවර්ගයන්

News & Events

Scroll To Top