47 ஆவது மாகாண மட்ட விளையாட்டு விழாவில் தம்பலகாமம் பிரதேச செயலக கழகம் சார்பாக பங்குபற்றிய வீரர்கள் 3தங்கப் பதக்கங்கள்,3 வெள்ளிப் பதக்கங்கள்,4 வெண்கலப் பதக்கங்கள் என வெற்றி வாகை சூடியுள்ளனர். அண்மையில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் (22,23) இடம் பெற்ற போட்டிகளிலேயே இவ்வாறு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.திருகோணமலை மெய்வல்லுனர் சம்பியனாகவும் வெற்றியை தனதாக்கியதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் பங்கேற்கவுள்ளனர்.
பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் K.M. ஹாரிஸ் சிறப்பாக வழிநடாத்தியதுடன் இவர்களுக்கான பயிற்சியையும் வழங்கியிருந்தார்.
 
309553378 1546844379085701 8732374941087307334 n309721373 1546844455752360 532324103874805405 n310043701 1546845122418960 6024487732718950190 n
இவ் வீரர்களுக்கு பிரதேச செயலகம் சார்பான
வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்...
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்திக் கிளையின் கிரக பிரவேச (புது மனை புகு விழா) 2022.09.28 அன்று பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
பிரதேச செயலக அருகாமையில் உள்ள கட்டிடத்துக்கு செல்வதற்கான சுப நேரப்படி சமய அனுஷ்டானங்களுடன் குறித்த அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது.
309255060 1546772602426212 3270271298609056069 n309360541 407870698176259 8150865211697805589 n
309549805 1546770725759733 7826209079842223359 n309662496 407870718176257 6772741799315800161 n309662952 1546772555759550 6606826852477215087 n
 
இதில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம கலந்து கொண்டதுடன் இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் கட்டிட வளாகத்தையும் அரச அதிபர் இதன் போது பார்வையிட்டார்.

Dhampasal building opening ceremony held on 10/04/2021 at Saliyapura.

7.5Lks allocated for this project by the Ministry of Buddasasana under the Punniyagrama work last year.

 

171406912 1187585355011607 2496238716115977671 n171201683 1187585278344948 1138977236245752322 n

Samurdhi Business Market held on April 12 2021.

171394831 1188877444882398 2103598329464274236 n171464991 1188877454882397 547177250458132506 n171262292 1188877414882401 411036577999852253 n

மகளிர் தின கொண்டாட்டமும் சித்திரக் கண்காட்சியும்
தம்பலகாம பிரதேச செயலகம் மற்றும் தம்பலகாம பிரதேச மகளிர் செயலணி இணைந்து நடாத்திய மகளிர் தின கொண்டாட்டமும் சித்திரக் கண்காட்சியும் இன்று 2021.04.06 ம் செவ்வாய்கிழமை செயலக கேட்போர்கூடத்தில் மிகக்கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை திணைக்கள ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் அவர்காளும் சிறப்பு அதிதியாக RECDO நிறுவனத் தலைவர் ஜே.எம்.அஷார் மற்றும் இலங்கை வங்கி தம்பலகாம முகாமையாளர் உட்பட RECDO திட்ட முகாமையாளர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் அவர்களுடன் அல் வபா பவுண்டேஷன் தலைவர் முவாசீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தம்பலகாம பிரதேச பாடசாலைகளுக்கிடையில் இல்லத்து வன்முறை,சிறுவர் துஷ்பிரயோகம் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி முறையே முதலாமிடம் -10000/-,இரண்டாமிடம் -7500/-,மூன்றாமிடம் -5000/- பெற்ற மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும் பங்குபற்றிய 200மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
அதேவேளை மாவட்ட ரீதியில் சிறப்பாக இயங்கியமைக்காக தெரிவு செய்யப்பட்ட மகளிர் சங்கங்களான திலின துரு மகளிர் சங்கம்,எக்கமுத்து மகளிர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு,சிரேஷ்ட்ட உறுப்பினர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
 
169085541 1184984891938320 3665004740038230575 n168733162 1184984818604994 5402396040636024506 n169436990 1184984785271664 5024086029326389112 n169917487 1184984761938333 2330924390952103293 n170017804 1184985945271548 1408930597771401604 n

Subcategories

News & Events

Scroll To Top