சிறுவர் தினம் 2019
பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு என்ற கருத்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ் நிகழ்வானது 11.10.2019 அன்று நடைபெற்றது.
முதியோர் தினம் 2019
முதியோர்களான உங்களுக்கு சம உரிமை வழங்கும் நாளைய தினத்தை நோக்கி என்ற கருத்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் தலைமையில் முதியோர் தினம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் DR.T.ஜீவராஜ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
முதியவர்களுக்கான நிகழ்ச்சிகள் ,விளையாட்டு போடடிகள் மற்றும் அவர்களுக்கு பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வானது 10.10.2019 அன்று நடைபெற்றது.
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் பத்தினிபுரம் கிராமத்தில் ONUR கருத்திட்டத்தின் கீழ் Clinic center
அடிக்கல் நடும் நிகழ்வு 05.10.2019 அன்று தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே. ஶ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.





மாதிரிக் கிராமம்
05.10.2019 அன்று திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நிர்வாக பிரிவில் மீராநகரில்
நிர்மாணிக்கப்பட்ட " மினா_நகர் " உத்தியோக பூர்வமாக மக்களிடம் வழங்கப்பட்டன. இந் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே. ஶ்ரீபதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ. ஏ.புஸ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









நவராத்திரி விழா
இன்று எமது பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ் நிகழ்வில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


















