තඹලගමුව ප්රාදේශීය විගණන හා කළමණාකරන රැස්වීම 2022.10.05 දින පෙ.ව. 9.30 ට, එහි සභාපති තඹලගමුව ප්රාදේශීය ලේකම් ජේ. ශ්රීපති මහත්මියගේ ප්රධානත්වයෙන් ප්රාදේශීය ලේකම් කාර්යාල ශ්රවණාගාරයේ දී පැවැත්විය.ඒ සඳහා ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ ප්රධාන අභ්යන්තර විඝණන නිලධාරිතුමා, ත්රිකුණාමලය විගණකාධිපති උප කාර්යාලයේ විගණන අධිකාරි තුමාගේ සහ කාර්යාල මාණ්ඩලික නිලධාරීන්,අංශ ප්රධානීන් ඇතුළු සියලුම ක්ෂේත්ර නිලධාරීන්ගේ සහභාගිත්වයෙන් සිදු කරන ලදී.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதி கணக்காய்வாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள்
கிளை தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Saraswathi pooja
நவராத்திரி தினத்தினை முன்னிட்டு வாணி விழா நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (2022.10.04) காலை இடம் பெற்றது.
விசேடமாக நவராத்திரியின் இறுதி நாளான இன்று பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-2022
சர்வதேச சிறுவர் தினமான இன்று (01) தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
"சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்" எனும் தொனிப் பொருளின் கீழ் இம் முறை சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம் பெற்று வருகிறது .தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ் வைபவத்தில் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி பிரிவின் தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சிறுவர் தின
வாழ்த்துக்கள்
Happy childrens Day
අද දින තඔලගමුව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ "සිනහ ගෙනෙන - අපේ ලොවක් "තේමාව කරගත් 2022 ලෝක ළමා දින උත්සවය කාර්යාලීය පරිශ්රයේදී උත්කර්ෂවත් අන්දමින් විනෝද ක්රීඩා හා විවිධ ප්රසංගයකින් වර්ණවත් විය.ප්රධාන ආරාධිත අමුත්තා වශයෙන් තඔලගමුව ප්රාදේශීය ලේකම් තුමිය සහභාගී විය.







இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக 2021ல் அங்கத்தவர்களை இணைக்கும் திட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது..
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை ஜேகப் பீச் ஹோட்டலில் 30.09.2022 ந் திகதி அன்று இடம் பெற்ற போது தம்பலகாமம் பிரதேச செயலாளர் விருதினை பெற்றுக் கொண்டார்.
காணிக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கி வைப்பு
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணி அனுமதிப் பத்திரமற்றவர்களில் விண்ணப்பித்தவர்களில் காணிக்கான அனுமதி மற்றும் உரித்துப் பத்திரங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் 2022.09.28 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதம விருந்தினராக மாகாண காணி ஆணையாளர் அவர்களும்,உதவி ஆணையாளர் உட்பட கலந்து கொண்டு காணி பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

























