தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவினுள் அமைந்துள்ள கல்மட்டியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கல்மெட்டியாவ குளத்தின் கீழ் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படும் விவசாய காணிகளில் இம்முறை வேளான்மை செய்கையை தவிர்த்து (குளத்தின் நீர் வேளான்மைக்கு போதாமையினால்) சோளம் மற்றும் ஏனைய உப உணவுப் பயிர் செய்கை செய்யப்பட்டு அதன் அறுவடை 06.08.2019 அன்று மாவட்ட செயலாளர் அவ்ர்களினால் கல்மட்டியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர்,மாவட்ட விவசாய பணிப்பாளர், கம நல அபிவிருத்தி உதவி ஆணையாளார், மாகான நீர் பாசன பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் - தம்பலகாமம், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் பங்குபற்றினார்கள்.
























