திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வொன்று இன்று (21) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலக இந்து கலாச்சாரப் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் பொங்கலுக்கான விசேட பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றன. விசேட பூஜையினை பாரதிபுரம் முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்கள் பரப்பிரம்மஜோதி நடாத்தினார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் அறநெறி பாடசாலை மாணவர்களின் தைப்பொங்கல் விசேட கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதன் போது பொங்கல் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.618149866_2415163965587067_6917709561940377197_n.jpg618857327_2415163555587108_7719731276708578520_n.jpg619900605_2415162278920569_2286800981231090868_n.jpg618514285_2415163665587097_360992384416670283_n.jpg618902582_2415163705587093_4101059209383299822_n.jpg618348631_2415163475587116_4516532795559673832_n.jpg618947871_2415163912253739_2002583428433993722_n.jpg

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top