பிரதேச சாகித்திய விழா -2019
தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாச்சார அதிகாரசபை இணைந்து நடாத்திய பிரதே சாகித்திய விழா-2019 , தி/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் 2019/12/13 திகதி நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர், அரசாங்க அதிபர் திரு என்.என். புஸ்பகுமார அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பிரதேச சபை தவிசாளர் கெளரவ எஸ்.என் சுபியான் மற்றும் ஏனைய அரசஅதிகாரிகள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட இவ் விழாவில் #ஏர்முனை_பாகம்_02 நூல் வெளியிடப்பட்டது மற்றும் பிரதேச கலைஞர்கள் கெளரவிக்கப் பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.


























