பண்டிகைக் காலத்தில் மகப்பேறு கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (04 மாதங்கள் வரை) போசாக்கு உணவு பொதிக்கு ஒரு முறை மாத்திரம் ரூபா 5000கொடுப்பனவு வழங்கும் திட்டம்
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஊடாக வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான (04 மாதங்கள் வரை) பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போசாக்கு பொதிக்கான வவுச்சர் இன்று (15)வழங்கி வைக்கப்பட்டன.
ரூபா 5000.00 பெறுமதியான குறித்த வவுச்சர் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கல்மெடியாவ தெற்கு கிராமிய வைத்தியசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த போசாக்கு பொதிக்கான வவுச்சரானது ஒரு முறை மாத்திரம் விசேட பண்டிகைக்கால வவுச்சராக வழங்கப்பட்டுள்ளது.2025 நவம்பர் 30ம் திகதிக்குள் மகப்பேற்று கிளினிக்குகளில் பதிவு செய்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் (04மாதங்கள் வரை) அனைவரும் இதனை பெற்றுக் கொண்டனர். தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ,தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.
முள்ளிப்பொத்தானை,கல்மெடியாவ தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் குறித்த வவுச்சர்களை பெற்றுக் கொண்டனர். குறித்த வவுச்சர்களை அன்றைய தினமே உரிய போசாக்கு பொதிக்கான உபகரணங்களை அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நிருவாக உத்தியோகத்தர் ,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
උත්සව සමයේ ගර්භණී සහ කිරි දෙන මව්වරුන් සඳහා රුපියල් 5000ක පෝෂණ මල්ලක් ලබා දීමේ වැඩසටහන
ත්රිකුණාමලය, තම්පලකාමම් ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පූර්ව ළමා විය සංවර්ධනය සඳහා වූ ජාතික ලේකම් කාර්යාලය මඟින් ගර්භණී සහ කිරි දෙන මව්වරුන් (මාස 04 දක්වා) සඳහා උත්සව සමය වෙනුවෙන් වූ විශේෂ පෝෂණ ආහාර මල්ලක් සඳහා වවුචරයක් අද (15) දින ලබා දෙන ලදී.
රුපියල් 5000.00ක් වටිනා එම වවුචරය ලබා දීමේ උත්සවය තම්පලකාමම් ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ කල්මෙඩියාව දකුණ ග්රාමීය රෝහලේදී පැවැත්විණි. ප්රාදේශීය ලේකම් වන ජේ. ශ්රීපති මහත්මියගේ මඟ පෙන්වීම යටතේ පැවති මෙම පෝෂණ මල්ල සඳහා වූ වවුචරය එක් වරක් පමණක් වූ විශේෂ උත්සව සමයේ වවුචරයක් ලෙස ලබා දී ඇත. 2025 නොවැම්බර් 30 වන දිනට පෙර මාතෘ සායනවල ලියාපදිංචි වූ ගර්භණී මව්වරුන් සහ කිරි දෙන මව්වරුන් (මාස 04 දක්වා) සියලු දෙනාටම මෙය ලැබී ඇත. තම්පලකාමම් සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලය සහ තම්පලකාමම් ප්රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව මෙය සංවිධානය කර ලබා දෙයි.
මුල්ලිපොතානෙයි සහ කල්මෙඩියාව දකුණ යන ග්රාම නිලධාරී වසම්වල අය අද දින මෙම වවුචර ලබා ගත්හ. අදාළ පෝෂණ මල්ලට අවශ්ය උපකරණ එදිනම අනුමත වෙළඳසැල්වලින් ලබා ගන්නා ලෙසද ඔවුන්ට දැනුම් දී ඇත.
මෙම අවස්ථාවට පරිපාලන නිලධාරී, තම්පලකාමම් සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාලයේ නිලධාරීන්, ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ පූර්ව ළමා විය සංවර්ධන නිලධාරී ඇතුළු ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් රැසක් සහභාගී වූහ.





















